நாட்டு அழகு மூலிகை பூ செடி
வணக்கம்...
நாட்டு அழகுமுலிகை
நாட்டு அழகுமுலிகை னு தலைப்பு வச்சிருக்கேன்னு பாக்குறிங்களா ஆமாங்க நா பேச போறது... நாட்டு அழகு செடிகள பத்திதான்
...நாட்டு பூச்செடிகள்...
நாட்டு பூச்செடிகளுக்கு வரைக்கும் கட்டுரை எழுத வச்சிட்ங்களே என்ன பன்றது ...
அக்காலத்தில் பூச்செடிகள் மருந்தாகவும் அதன் அழகை பார்த்து ரசிக்கும் படியாவும் இருந்தது...ஆனால் இன்று நாட்டு பூச்செடிகளை விட்டு விட்டு வெளி நாட்டு செடிகளை நாம் வளர்க்கிறோம். எதற்காக வளர்கிறோம் என்று நமக்கே தேறியவில்லை ஆனால் வளர்கிறேம்!!!
வெளிநாட்டு செடிகள் எதுக்கும் பயன்படுத்த முடியாது ...
நம் நாட்டு செடிகள் பல இருக்கின்றன ,செம்பருத்தி பூ பல நோய்களை நீக்கும் அரு மருந்தாக இருக்கிறது தலைமுடிகளை அழகாக மாற்றுகிறது.. அதன் பூவை சாப்பிட்டால் உடம்புக்கே நல்லது காலையில் அதன் பூவை தண்ணீரில் போட்டு சக்கரை சேர்த்து டீ,காபிக்கு பதில் குடிக்கலாம் ..
நித்திய கல்யானி
இதுவும் அழகு செடி ஆனால் இதன் மருத்துவ குனங்கள் பல.
புற்றுநோய், தலைமுடி பிரச்சனை,பெண் சம்பத்த பட்ட நோய்கள் நீக்க கூடியது ...
கல்வாழை ..
இந்த இலையில் நாம் சாப்பிடலாம் மிகவும் நல்லது கல்வாழை நிலத்தின் அழுக்குகளை எடுக்கிறது சுற்று சூழலை பாதுகாக்கிறது கல்வாழை வைத்தால் பட்டாம்பூச்சி அதிகம்வரும் அதன்மூலம் இயற்க்கை செடி கொடி மரம் பெருக்கம் அடைகிறது.நீரை வடிகட்டும் .. இதன் கிழங்கை சாப்பிடலாம் இதன் காய்கள் மிகவும் காந்த சக்த்திகள் வாய்ந்தது .. இதன் வேரை சாப்பிட்டால் வியர்வையை நீக்கும்..இதன் இலை விதை இரண்டையும் கலந்து தோல் பாதிப்புக்கு பயன்படுத்தலம் கல்வாழை விதைகளை அரைத்து நீரில் கலக்கி நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
மந்தாரை செடி
மந்தாரை உள்ளவரை நொநந்தாரை காணமுடியாது என்பது பழ மொழி ...இதன் இலைகள் சாப்ட்டிற்க்கு தட்டாக பயன்படுகிறது .. பூ தைராய்டு சரி செய்யும் இதன் பூவை கசாயம் செய்து சாப்பிட்டால் பேதி ஆகும் ... பேதியாக பயன் படுத்தலாம்.மந்தாரையில் பல வகை உண்டு கொக்கு மந்தாரை, செம்மந்தாரை,காட்டு மந்தாரை,மந்தாரை வேரை தண்ண்ணீரில் சூடு செய்து தினமும் குடித்தால் உடல் எடை குறையும், பாத்திரத்தில் விலக்கென்னையை ஊற்றி பூக்களை போட்டு துங்கும் முன் கண்களை சுற்றி தடவிவந்தால் கருவளையம் நீங்கும்.
மயில் மாணிக்கம்
இம்மூலிகை சிறிது மிளகுடன் சேர்த்து அரைத்து சிறு கொட்டைப்பாக்கு அளவு தினம் ஒரு வேலை 7 நாள் கொடுக்க வெள்ளை வெட்டை குணமாகும்.
மயிர்மாணிக்கத்தின் இலையை அரைத்து வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் வைத்துக்கட்ட விரைவில் குணமடையும்.
10 கிராம் எடைகொண்ட வேருக்கு 100 மி லி அளவு தண்ணீரில் கொதிக்க காட்சி வடிகட்டி வேளைக்கு 1 அவுன்ஸ் வீதம் தினம் 2 வேளை கொடுத்து வர மேகவாயு, வெள்ளை, மேககாங்கை தீரும்.
இதன் வேரை கைப்பிடி அளவு எடுத்து அதில் வேம்பாடம் பட்டை 5 கிராம் போட்டு நன்றாக அரைத்து 100 மிலி நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி பதத்தில் வடித்து தலைக்கு பூசி வர பொடுகு நீங்கும்.
அந்தி மந்தரை அழகு மூலிகை
அந்தி என்ற வார்த்தைக்கு அந்திமம், முடிவு சாயுங்காலம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். சூரியன் சாயுங்காலமான மாலை நேரத்தில் மொட்டுக்களை விரியச் செய்து கண்ணுக்கு அழகாய்க் காட்சி தருகின்ற ஓர் செடி வகை தான் அந்திமல்லி ஆகும். அந்திமல்லி தன்னோடு அழகை மட்டும் வைத்திருக்கவில்லை.
அகிலத்தவர்க்கு ஆரோக்கியம் தருகின்ற அருங்குணங்களையும் அடக்கி வைத்திருக்கிறது என்பதை இன்று நாம் அறிந்து கொள்ளுவோம். அந்திமல்லியை அந்தி மந்தாரை என்றும் தமிழில் குறிப்பதுண்டு. மாலை நான்கு மணிக்கு மலரத் தொடங்கி இரவு ஏழுமணிக்கு மேல் தொடங்கி காலையில் உதிர்ந்து போகும் பூக்களைக் கொண்டது.
அந்தி மல்லியின் பூக்கள் உணவுப் பண்டங்களுக்கு வண்ணம் தருவதற்காகப் பயன்படுத்துவதுண்டு. இதன் இலைகள் கீரையைப் போல உணவுக்குப் பயனாகும். மூலிகை மருத்துவத்தில் அந்திமல்லியை ஒரு சிறுநீர் பெருக்கி ஆகவும், மலமிளக்கி ஆகவும், காயங்களை ஆற்றவும் பயன்படுகின்றது. அந்திமல்லியின் வேர் இன உணர்வைத் தூண்டக் கூடியது என்றும் சிறுநீரைப் பெருக்க கூடியது என்றும் மலத்தை இளக்க கூடியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீக்கங்களைக் கரைப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக விளங்குகின்றது. அந்திமல்லியின் இலைகள் வலியையும் வீக்கத்தையும் கரைக்கும் வல்லமை உடையன. இதன் விதைகள் மிளகைப் போன்ற உருவத்தை ஒத்ததால் இதை மிளகோடு கலப்பதற்கு பயன்படுத்துவது உண்டு. அதிகமாக விதையை உணவுப்பொருளோடு சேர்ப்பது அதிக நச்சுத் தன்மையை சேர்ப்பதாகும் என்பதை மறந்துவிடக் கூடாது.
சிறுநீர் பெருக்கியாவும், வயிற்றைச் சுத்திகரிப்பதற்கும் கூட அந்திமல்லியின் வேர் பயன்படுத்தப்படுகின்றது. அந்திமல்லியின் இலைகளும் பூக்களும் கூட மருத்துவ குணங்களைப் பெற்று விளங்குகின்றன. இதன் சாற்றை எடுத்து மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது அக்கிப் புண்கள், காது சம்பந்தமான வலிகள், தோல் நோய்களான நமைச்சல், எக்ஸிமா, ஹெர்ப்பிஸ் தோலின் மேல் தோன்றிய புள்ளிகள், அழுகி நாற்றமடிக்கும் ஆறாத நாட்பட்ட புண்கள், தேனீ மற்றும் தேள் கடிகள் ஆகிய துன்பங்களினின்று விடுதலை கிடைக்கிறது.
பூக்களை நீரிலிட்டுக் காய்ச்சி வருகின்ற ஆவியை நுகர்வதால் அல்லது குளிக்கும் வெந்நீரில் இட்டு ஊறவைத்துக் குளிப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இயலும். அந்தி மல்லியின் பூக்கள் பொன்னுக்கு வீங்கி என்னும் நோயைக் குணப்படுத்துவதற்கும், குழந்தைப் பேற்றை துரிதப்படுத்துவதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றது.
அந்திமலல்லி தொற்று நோய்க் கிருமிகளைத் தோற்று ஓடச் செய்விப்பது, நுண்கிருமிகளைத் தோற்றுவிப்பது, பூஞ்சைக் காளானைப் போக்கச் செய்வது ஒட்டுண்ணிகளை ஓட்ட வல்லது. அந்திமல்லியின் வேர்களில் ஆக்ஸிமிதைல் ஆந்த்ரோ குயினோன் என்னும் வேதிப் பொருள் மலிந்துள்ளது. இது வயிற்றுப் போக்கை உண்டாக்க கூடியது.
அந்திமல்லி சமூலம் டிரைகோ நெல்லின் என்னும் மருத்துவ வேதிப் பொருளை உள்ளடக்கி உள்ளது. இது மலமிளக்கியாகச் செயல்பட்டு மலக்குடலில் ஏற்படும் புற்று நோய்க்கு மருந்தாகவும், தணிப்பு மருந்தாகவும் பயன் தருகின்றது. இவை மட்டுமின்றி கேலக்டோஸ்அபினோஸ் ஸ்டிராய்ட்ஸ் கார்போ ஹைட்ரேட்ஸ் கிளைகோ ஸைட்ஸ் மற்றும் புரதச் சத்துக்களையும் அந்திமல்லி கொண்டுள்ளது.
அந்திமல்லி கணையம் மற்றும் கணையம் சார்ந்த பகுதிகளுக்கு பலமாய் நின்று சர்க்கரை நோய்த்தடுப்பு மருந்தாக உதவுகிறது. வெள்ளைப் பூக்களை உடைய அந்திமல்லியின் இலைகள் பல்வேறு நுண்கிருமிகளை எதிர்த்து அழிக்கவல்ல குணம் கொண்டது. அந்திமல்லியின் விதைகள் ரத்தத்தை உறையும் நேரத்தையும், கரையும் நேரத்தையும் பாதிக்கும் தன்மை வாய்ந்தது ஆகும்.
உலகின் பல இடங்களில் உள்ள பழங்குடி மக்கள் ரத்தக் கசிவு எங்கு ஏற்பட்டாலும் அதை தடுத்து நிறுத்தி அந்திமல்லி விதையை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அதிக ரத்தப்போக்கு எவ்விதத்தில் ஏற்படினும் அந்திமல்லி விதைகளை மருத்துவர் அறிவுரையின் பேரில் அளவோடு எடுத்துக் கொள்வதால் அடக்கி நிறுத்தப்படும்.
அந்திமல்லி விதையினின்று பிரித்தெடுக்கப்படும் புரதச் சத்துக்கள் புற்றுநோயைத் தடுக்க வல்லதாகவும், நுண்கிருமிகளைக் கொல்லக் கூடியதாகவும் விளங்குகிறது என்று நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீன மக்கள் அந்திமல்லியை சர்க்கரை நோய் தணிப்பு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
• அந்திமல்லி இலைகளை சேகரித்து மைய அரைத்து சாறு எடுத்து தோலில் தடிப்புடன் கூடிய நமைச்சல் ஏற்பட்ட போது மேலே பூசுவதினால் நமைச்சல் அடங்குவதோடு சில்லென்று சுகமாய் இருக்கும்.
• அந்திமல்லி சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாற்றோடு போதிய தேன் கலந்து உள்ளுக்குக் குடிப்பதனால் பெண்களின் இன உறுப்பினின்று கசியும் வெள்ளைப் போக்கு மற்றும் அந்த வெள்ளைப் போக்கின் காரணமாக ஏற்பட்ட அரிப்பு, புண் ஆகியனவும் குணமாகும்.
• அந்திமல்லி இலைகளை நசுக்கி உடலில் வெப்பத்தினாலோ தீயினாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ ஏற்பட்ட நீர்க் கொப்புளங்களின் மேல் பூசி வைக்க கொப்புளங்கள் விரைவில் உடைந்து நீர்வற்றி இருந்த இடம் தெரியாமல் ஆறிப் போகும்.
• அந்திமல்லி இலையை மைய அரைத்து ஆறாது அடம் பிடிக்கும் நீர் சீழ்பிடித்த கட்டிகள் ஆறிப் போகும்.கொனோரியா என்னும் பால்வினை நோய்கள் வந்து துன்புறுத்தும் போது மனதாலும் உடலாலும் வேதனைப்படுகின்ற நிலை ஏற்படுகின்றது.
• இனஉறுப்புகளில் நாற்றம் தரும் வெள்ளை ஒழுக்கு ஏற்பட்டு உடலை நலியச் செய்வதோடு அக்கம் பக்கத்தினரை அருவருப்பாய் நெளியச் செய்கின்றது. இப்படிப்பட்ட கொனோரியா என்னும் பால்வினை நோய்க்கு இரண்டு தேக்கரண்டி அந்தி மல்லிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து அந்திசந்தி என தினம் இரண்டு வேளைகள் சில நாட்கள் சாப்பிட்டு வர குணம் உண்டாகும்.
• கை, கால்கள் அடிவயிறு முகம் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் நீர்கோர்த்துக் கொண்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்பட்ட நிலையில் அந்திமல்லி இலைச்சாறு இரண்டு தேக்கரண்டி சேர்த்து நன்கு உறவாகும்படி கலந்து தினம் இருவேளை உள்ளுக்குக் குடித்துவர உடலில் தங்கிய நீர்வடிந்து வீக்கம் வற்றிவிடும். அந்தி மல்லி ஓர் சிறந்த நீர்ப்பெருக்கி ஆகும்.
• அந்திமல்லியின் வேர்ப் பகுதியைக் எடுத்து நன்றாகக் கழுவி சுத்திகரித்து அதன் மேல் தோலை சீவி நீக்கிவிட்டு கிழங்கு பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மைய அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் மலத்தை இளக்கி வெளித்தள்ளும். வாந்தியை உண்டு பண்ணி வயிற்றைச் சுத்தம் செய்யவும் அந்திமல்லி கிழங்கு பசையைப் பயன்படுத்தலாம்.
• அந்திமல்லி இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்து ஆறாத அழுகிய புண்களையும் புதிதாக அடிப்பட்ட காயங்களையும் கழுவி வர உடன் ஆறும்.
• அந்திமல்லி இலையைய சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து பழுக்காத கட்டிகளின் மீது சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி வதக்கிய இலைகளை அதன் மீது பரவலாக ஒட்டி வைக்க கட்டிகள் விரைவில் உடைந்து சீழ் வெளியேறி சீக்கிரத்தில் குணமாகும்.
• அந்திமல்லிக் கிழங்கை சுத்தம் செய்து நெய்விட்டு வதக்கி 10 முதல் 15 கிராம் அளவு வரை அன்றாடம் உண்டு வர உடல் பலம் பெறும்.
மகிழம் பூ
மகிழமரம்:
பண்டைய தமிழ் மக்கள் பாரிய கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கும்போது மகிழமரக் கன்று ஒன்றை நட்டு மகிழ்ந்தார்கள். மகிழ மரமும் அதன் மலரின் மணமும் வித்தும் பலத்த விருத்தழயையும் பல ரோகங்களை நீக்கும் சக்தியையும் கொண்டவை.
மகிழமரம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. மேற்குத் தோடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது. இதற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. இதன் பூர்வீகம் வட ஆசியா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் வட ஆஸ்திரேலியா. இதன் உயரம் 20 முதல் 50 அடி உயரம் வளரக்கூடியது. அடர்த்தியான இலைகளையுடைய பசுமை மரம். நல்ல நிழல் தரும் மரம். மனதைக் கவரும் இனிய மணமுடைய கொத்தான வெள்ளைப் பூக்களையும் மஞ்சள் நிற சாப்பிடக் கூடிய பழங்களையும் உடைய மரம். பூவின் மணத்திற்காக நகரங்களில் பூங்காவிலும் கோயில் களிலும், வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இதன் மணம் மனதை மகிழவைக்கும். மகிழமரம் விதை நாற்றுக்கள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
மகிழ மரத்தின் மலர்கள் சக்கர வடிவத்தில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும். பழந்தமிழ் இலக்கியமான சீவகசிந்தாமணியில் “ஓடுதேர்க்கான் வகுளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கனிகள் முட்டை வடிவில் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
இந்த மரத்தின் பூவை மணம் உடையதாகவும், இப்பூவிலிருந்து வாசனை திரவியம் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பூவில் காய்ந்த பிறகும் நறுமணம் வீசும் என்றும்,இது மகிழவனேஸ்வரர் என்றசொல்லப்படும் சிவனுக்கு உரிய பூ என்பதால் ஆகவே இது சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் என்றும் சொல்லப்படுகிறது
மருதுதுவப் பயன்கள் -: மகிழமரத்தின் பூ, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும். தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும்.
பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.
கருவேலம் பற்பொடியில் பல் துலக்கி மகிழ இலைக் கியழத்தால் வாய் கொப்பளித்து வர பல் நோய் அனைத்தும் தீரும்.
மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும்.
10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து 50 மி.லியாக காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். காய்ச்சல் தணியும்.
மகிழங் காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும்.
மகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்ட் வர தாது விருத்தியாகும். உடல் வெப்பு, மலக்கட்டு, நஞ்சு ஆகியவை தீரும்.
மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அறிந்தி வர காச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோழ்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். மூத்திர எரிச்சல் குறையும். பழத்தை குடநீராக்கிக் குடிக்க குழந்தை பிறப்பின் போது எழிதாக இருக்கும். பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது.
"தாதுவைநன் மெய்யழகைச் சக்தியை உண்டாக்கிவிடுஞ்
சீதளமென்பார் கலிங்கச் செய்மருந்தாம் - வாதை
மலத்தைவிழித் தோஷத்தை வலவிஷத்தை வெப்பை
விலக்கும் மகிழம் விதை
வெகு வனலமாகு விரதமிக வுண்டா
முகர வரோசக முறியு மிகவு
மகிழத் துரு மலர்க்க",,,,,,,முகையதீன் ராவுத்தர்
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
வகுளத்தின் மருத்துவப் பயன்களுக்கு அடிப்படையாக அமைபவை குர்சிடால், குர்சிடின், அமினோஅமிலங்கள், டி.குளுக்கோஸ், லுபியோல், பெட்டுலினிக் அமிலம் போன்றவை.. இலை, பூ, காய், விதை, பட்டை ஆகியன மருத்துவக் குணமுடையது.
காமம் பெருக்கும் மலர்கள்
மணமிக்க மலர்களில் இருந்து வாசனைப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. மகிழம்பூவில் இருந்து எண்ணெய் எடுத்து அதில் சந்தனமர எண்ணெய் கலந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கலாம்.
மலர்களின் பொடி மூக்குப்பொடியாக உள்ளிழுக்கப்பட்டு தலைவலி போக்க உதவுகிறது. பூ தாது வெப்பமகற்றும், காமம் பெருக்கும், விதை குளிர்ச்சியூட்டும், தாதுபலம் பெருக்கும், நஞ்சு நீக்கும். மகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். பட்டை, சத்து மருந்தாகவும் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அருந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோல்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது.
நறுமணம் மிக்க மகிழமரத்தின் பூக்களை நுகர்ந்தலே சளி வெளியேறும், தலைவலி குணமடையும், உற்சாகம் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். மகிழம்பூவில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் காயம் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. காய்ச்சலுக்கு டானிக் போல பயன்படுத்தலாம்.
கருவை பாதுகாக்கும்
பெண்களின் கருத்தரித்தலை ஊக்குவிக்கும். 10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து தினம் 50 மில்லி காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். பழத்தை சாறுபிழிந்து குடிக்க குழந்தை பிறப்பின் போது எளிதாக இருக்கும்.
கனிகள் தொடர் வயிற்றுப் போக்கினை தடுக்கும். விதைகள் வயிற்றுப்போக்கினை தூண்டக்கூடியது. குழந்தைகளின் மலச்சிக்கலை போக்க வல்லது. மலர்கள் கனிகளுடன் சேர்ந்து சதை இருக்கிப் பொருளாக புண்களைக் குணப்படுத்துகிறது.
பல்நோய் குணமடையும்
மகிழம்பூ கசாய நீர் பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களில் கொப்பளிப்பாக பயன்படுகிறது. இதனைக் கொண்டு வாய்க்கொப்பளிக்க பற்களும், ஈறுகளும் கெட்டிப்படும். மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும். மகிழங்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும். பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.
கண் நோய்க்கான சொட்டுமருந்து தயாரிக்க மகிழமரத்தின் விதைகள் பயன்படுகின்றன. விதையில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து வயிற்று வலியை குணப்படுத்துகிறது. விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மூட்டுவலிக்கு மருந்தாகிறது. விதைகளை பவுடராக்கி அதில் தேன், நெய் கலந்து சாப்பிட உடலுக்கு வலு கிடைக்கும். மகிழமரத்தின் வேரை விழுதுபோல அரைத்து வினிகரில் கலந்து வீக்கத்தில் தடவினால் விரைவில் குணமடையும்.
திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர் முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தலமரமாக உள்ளது. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை போன்ற திருத்தலங்களில் மகிழம்பூ இறைவழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
Iஇந்துக்களுக்கு மட்டுமின்றி பௌத்தம், சமண சமயத்தவரும் இதனை புனித மரமாக போற்றுகின்றனர்.
செவ்வந்தீ பூ (சாமந்தி பூ)
ஒவ்வொரு விதமான பூவிலும் ஒவ்வொருவிதமான மணமும், மருத்துவக் குணமும் நிறைந்துள்ளது. இதுபோல் மலர்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனை திரவியங்களாக பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பூக்களில் செவ்வந்திப்பூ என அழைக்கப்படும் சாமந்திப் பூவின் மருத்துவக் புயன்களை அறிந்துகொள்வோம்.
செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர். இந்தியா முழுவதும் வளரக் கூடிய தன்மை வாய்ந்தது. இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் பூக்கும். இவற்றோடு சீமைச் சாமந்திப்பூ என வேறொரு பிரிவும் உண்டு. ஆனால் இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே. உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு முதலில் தலைவலியாகத்தான் வெளிப்படும். இந்த தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும். மலச்சிக்கல்தான் நோயின் முதல் அறிகுறி. மலச்சிக்கல் என்பது மலம் வெளியேறாமல் இருப்பது மட்டுமல்ல, மலம் அடிக்கடி வெளியேறுவதும் அல்லது சிறுகச்சிறுக வெளியேறுவதும் மலச்சிக்கலின் காரணம்தான்.
இவர்கள் சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும். உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இத்தகைய உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும். சிலருக்கு எவ்வளவுதான் உணவருந்தினாலும் உடல் எடை கூடாமல் மெலிந்தே இருப்பார்கள். எப்போதும் சோர்வாக தோன்றுவார்கள். இவர்கள் சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது. சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில் குறையும்.
அரைலிட்டர் தண்ணீரில் 25 கிராம் அளவு நிழலில் உலர்ந்த சாமந்திப் பூவை கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பனை வெல்லம் சேர்த்து அப்படியே மூடிவைத்து 15 நிமிடங்கள் கழித்து வடிகட்டி அருந்தி வந்தால் சூதகக் கட்டு, சூதகச் சன்னி, குளிர்சுரம் எளிதில் குணமாகும். தினமும் இருவேளை என அருந்துவது நல்லது. சாமந்திப் பூவை நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.
இவை அனைத்தும் நாட்டு பூ செடிகள் தான் இன்னும் பல மூலிகள் இருக்கிறது ..
கொழிகொண்டை
மல்லிகை பூ அதில் பல ரகங்கள் உள்ளன
சென்பக பூ
வெட்டி போட்டால் குட்டி போடும், கட்டி போட்டால் குட்டி போடும்,பொங்கள் செவ்வந்தி, கணகாம்பரம் ,கோழிகொண்டை இன்னும் பல அழகு மூலிகைகள் இருக்கிறது அடுத்த பதிவில் கூறுகிறேன்
நாட்டு பூச்செடிகளை காசு கொடுத்து வாங்கவேண்டிய அவசியமில்லை இன்றும் கிராமபுறத்தில் சும்மா வாங்களாம் அனைத்து விடுகளிலும்
நாட்டு பூ செடிகளை நடுவோம் நலமோடு வாழ்வோம்.
இப்படிக்கு
அருள்மணி
Comments
Post a Comment